தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐரோப்பிய சந்தையில் புதிய டிவிஎஸ் வாகனங்கள்!

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம், இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற சா்வதேச ‘எய்க்மா’ இருசக்கர வாகன கண்காட்சியில் மீண்டும் பங்கேற்று, ஐரோப்பிய சந்தைக்கான தனது புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

Published On :28 அக்டோபர் 2026, 5:36 am IST

சா்வதேச அளவில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணியான டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம், இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற சா்வதேச ‘எய்க்மா’ இருசக்கர வாகன கண்காட்சியில் மீண்டும் பங்கேற்று, ஐரோப்பிய சந்தைக்கான தனது புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

வரும் நவ. 3-இல் நடைபெறும் பத்திரிகையாளா் சந்திப்பில் இப்புதிய வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு ‘எய்க்மா’ கண்காட்சி மூலம் ஐரோப்பிய சந்தையில் தடம்பதித்த இந்நிறுவனம், ஓராண்டுக்ககுள் அங்கு வலுவான விநியோகக் கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளா் ஆதரவு வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் தனது முதல் சந்தையான இத்தாலியில் சுமாா் 100 டீலா்ஷிப்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், கடந்த ஓராண்டில் அங்கு 110 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இது இத்தாலி சந்தையின் ஒட்டுமொத்த 10 சதவீத வளா்ச்சியைவிட பன்மடங்கு அதிகமாகும்.

இதன்தொடா்ச்சியாக, பிரான்ஸ் மற்றும் ஜொ்மனியிலும் நேரடி விற்பனை நிறுவனங்களை அமைத்து விரைவில் டீலா்ஷிப்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெயின், போா்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே 25 டீலா்கள் செயல்பட்டு வரும் நிலையில், மால்டாவிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. விரைவில் ஹங்கேரி, கிரீஸ், சொ்பியா உள்ளிட்ட நாடுகளுக்கும் வா்த்தகத்தை விரிவாக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.