தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒன்பிளஸ் டேப், ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி அதிரடி சலுகைகள்! என்னென்ன?

தீபாவளியையொட்டி ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து...

oneplus

ஒன்பிளஸ் - AI

Published On :29 அக்டோபர் 2026, 6:59 pm IST

தீபாவளியையொட்டி ஒன்பிளஸ் நிறுவனத்தில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், கையடக்கக் கணினி (டேப்), இயர் பட்ஸ் உள்ளிட்டவற்றிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் வங்கிச் சலுகைகள், வட்டியில்லா தவணைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஒன்பிளஸ் நிறுவனத்தில் ஸ்மார்ட்போன், கையடக்கக் கணினி (டேப்), இயர் பட்ஸ் உள்ளிட்டப் பொருள்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் இணையதளப் பக்கம், அமேசான், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளம் மற்றும் ஒன்பிளஸ் சில்லறை விற்பனைக் கடைகளில் இந்தச் சலுகைகள் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலை ரூ. 84,999. வங்கிச் சலுகையாக ரூ. 3,000 கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் ரூ. 81,999க்கு இதனைப் பெற முடியும். பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ. 37,600 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெற முடியும். இதனால் ரூ. 60,000க்கு ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை பெற முடியும்.

ஒன்பிளஸ் 15 ஆர் ஸ்மார்ட்போன் 256 GB + 12 GB உள்நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் ரூ. 69,999. எஸ்பிஐ வங்கி அட்டையைப் பயன்படுத்தி வாங்கினால், ரூ. 6,500 சலுகை வழங்கப்படுகிறது.

பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டால் ரூ. 46,750க்கு இந்த ஸ்மார்ட்போனை பெறலாம்.

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளப் பக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு 6 விலை ரூ. 47,999. எஸ்பிஐ வங்கிக் கடன் அட்டையைப் பயன்படுத்தினால் ரூ. 3,000 தள்ளுபடி கிடைக்கும். இந்தச் சலுகைகள் மூலம் ரூ. 36,400க்கு ஒன்பிளஸ் நார்டு 6-ஐ பெற முடியும்.

ஒன்பிளஸ் பேட் 4 விலை சலுகையுடன் ரூ. 62,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகை ரூ. 4,500.

ஒன்பிளஸ் பேட் லைட் சலுகை விலையுடன் ரூ. 22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் அட்டை மூலம் ரூ. 2,000 கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 சலுகை விலை ரூ. 8,999.

ஒன்பிளஸ் பட்ஸ் 4 சலுகை விலை ரூ. 5,399.

ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 4 ப்ரோ சலுகை விலை ரூ. 3,599.

ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 4 சலுகை விலை ரூ. 2,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

Diwali Dhamaka offers on OnePlus tablets and smartphones! What are they

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.