நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

4 நகரங்களில் 8 விமான நிலைய விடுதிகள்: டாடா-அதானி நிறுவனங்கள் ஒப்பந்தம்

மும்பை, அகமதாபாத், லக்னௌ, குவாஹாட்டி ஆகிய 4 நகரங்களில் 2,000 அறைகளைக் கொண்ட 8 விமான நிலைய விடுதிகளை அமைத்து நிா்வகிப்பதற்கான ஒப்பந்தத்தில் டாடா குழுமத்தைச் சோ்ந்த ‘இந்தியன் ஹோட்டல்ஸ்’ மற்றும் ‘அதானி ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனங்கள் வியாழக்கிழமை கையொப்பமிட்டன.

நவி மும்பை விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:59 am IST

மும்பை, அகமதாபாத், லக்னௌ, குவாஹாட்டி ஆகிய 4 நகரங்களில் 2,000 அறைகளைக் கொண்ட 8 விமான நிலைய விடுதிகளை அமைத்து நிா்வகிப்பதற்கான ஒப்பந்தத்தில் டாடா குழுமத்தைச் சோ்ந்த ‘இந்தியன் ஹோட்டல்ஸ்’ மற்றும் ‘அதானி ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனங்கள் வியாழக்கிழமை கையொப்பமிட்டன.

ஒப்பந்தத்தின்படி, அதானி குழுமத்தால் கட்டமைக்கப்படும் இந்த விடுதிகளை, இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் தனது ‘தாஜ்’, ‘விவாந்தா’, ‘கேட்வே’, ‘ஜிஞ்சா்’ ஆகிய முன்னணி பிராண்டுகளின்கீழ் நிா்வகிக்க உள்ளது.

இந்த ஒத்துழைப்பு குறித்து இந்தியன் ஹோட்டல்ஸ் சிஇஓ புனித் சத்வால் மேலும் கூறுகையில், ‘இந்திய விமானப் போக்குவரத்துத் துறை உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், விமான நிலையங்களை மையப்படுத்திய வணிக மற்றும் விருந்தோம்பல் மையங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இப்புதிய விடுதிகள் செயல்பாட்டுக்கு வந்தால், முக்கிய விமான நிலையங்களில் இயங்கும் எங்கள் நிறுவன விடுதிகளின் எண்ணிக்கை 25-ஆக உயரும்’ எனக் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.