பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! வீழ்ச்சியில் வங்கி, ஐடி, ஆட்டோ பங்குகள்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Indian stock market

பங்குச்சந்தை - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:05 pm IST

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 26) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,990.04 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணி நிலவரப்படி 96.40 புள்ளிகள் சரிந்து 73,027.43 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.55 புள்ளிகள் குறைந்து 22,564.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

காலையில் சென்செக்ஸ், நிஃப்டி 50 ஆகிய குறியீடுகள் சரிவைச் சந்தித்த நிலையில் சற்று மீண்டு வருகின்றன.

துறைவாரியாக, நிஃப்டி பார்மா, மெட்டல் ஆகியவை ஏற்றத்துடன் வர்த்தகமாகின. அதேசமயம் நிஃப்டி பொதுத்துறை வங்கிகள், எஃப்எம்சிஜி, ஐடி, ஆட்டோ உள்ளிட்ட துறைகள் அதிக சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் எந்த மாற்றமும் இன்றி வர்த்தகமாயின.

நிஃப்டி குறியீடுகளில் பிஎஸ்இ, டாக்டர் ரெட்டிஸ், ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல், அதானி போர்ட்ஸ் ஆகியவை தலா 2 முதல் 3.5 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.