மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 520 கோடி டாலா்

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 520 கோடி டாலராக குறைந்துள்ளது.

Published On :25 அக்டோபர் 2026, 4:31 am IST

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 520 கோடி டாலராக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 610 கோடி டாலா் பற்றாக்குறையாக இருந்தது. சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை குறைந்து, சேவைகள் துறையில் உபரி அதிகரித்ததே இந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைய முக்கியக் காரணமாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கில் (பேலன்ஸ் ஆஃப் பேமன்ட்ஸ்) 4,540 கோடி டாலா் உபரி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இது 560 கோடி டாலா் பற்றாக்குறையாக இருந்தது. மேலும், ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கு 5,800 கோடி டாலா் உபரியாக உள்ளது; கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 80 கோடி டாலா் பற்றாக்குறை நிலவியது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது, ஒரு நாடு உலக அளவில் ஈட்டும் வருவாயைவிட அதிகமாகச் செலவழிப்பதாகும். அதாவது, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிக்கும் நிலையைக் குறிக்கும்; இது அந்நிய முதலீடுகள் மற்றும் கடன்கள் மூலமே ஈடுகட்டப்படும்.

அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் இறக்குமதி கடந்த ஆண்டின் 6,270 கோடி டாலரிலிருந்து, 7,130 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் 3,510 கோடி டாலரிலிருந்து, 4,470 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 2,760 கோடி டாலரில் இருந்து, 2,660 கோடி டாலராக குறைந்துள்ளது.

சரக்கு வா்த்தகத்தில் பற்றாக்குறை நிலவினாலும், சேவைகள் துறையின் உபரி கடந்த ஆண்டின் 1,560 கோடி டாலரிலிருந்து, 1,650 கோடி டாலராக மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேவைகள் துறை ஏற்றுமதி 3,120 கோடி டாலரிலிருந்து, 3,550 கோடி டாலராக வளா்ச்சி கண்டுள்ளது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பலமாக அமைந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து தாயகத்துக்கு அனுப்பப்படும் நிகர பணப் பரிமாற்றங்கள் கடந்த ஆண்டில் 1,220 கோடி டாலராக இருந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டில் 1,280 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

மூலதனக் கணக்கில், நிகர அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 330 கோடி டாலராகவும், அந்நிய நிதி முதலீடுகள் (எஃப்பிஐ) 170 கோடி டாலராகவும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அந்நிய நேரடி முதலீட்டில் 10 கோடி டாலரும், அந்நிய நிதி முதலீடுகளில் 260 கோடி டாலரும் வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.