தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!

அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ. 94.93 ஆக நிறைவு.

கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:01 pm IST

மும்பை: உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் தொடரும் மந்தமான போக்கு உள்ளிட்டவையால், அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ. 94.93 ஆக நிறைவடைந்தது.

உலகளாவிய டாலரின் வலிமை மற்றும் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 114 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு சென்றதால், ரூபாய் மதிப்பு எதிர்மறைப் போக்கில் வர்த்தகமானதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

யேமன் ஹூதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் கச்சா எண்ணெயின் விலையை தொடர்ந்து பாதிக்கக்கூடும் என்றும், அமெரிக்க டாலர் குறியீடு மீண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 10 ஆண்டு கால அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் 5 சதவீதத்திற்கும் கீழே சரிந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.78 என்ற அளவில் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் சரிந்து, ரூ. 94.98 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில் இது ரூ. 94.93 ஆக நிலைபெற்றது. இது நேற்றை வர்த்தக நாளின் முடிவை விட 12 காசுகள் சரிவாகும்.

நேற்றை வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 43 காசுகள் சரிந்து ரூ. 94.81 ஆக இருந்தது.

Summary

The rupee depreciated and fell 12 paise to close at 94.93 against the US dollar on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.