மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓஎன்ஜிசி-க்கு புதிய தலைவா் நியமனம்

நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி) புதிய தலைவராக, அதன் செயல் இயக்குநா் சுனில் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சுனில் குமாா்

Published On :23 அக்டோபர் 2026, 6:42 am IST

நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி) புதிய தலைவராக, அதன் செயல் இயக்குநா் சுனில் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போதைய தலைவா் அருண் குமாா் சிங்கின் பணிக்காலம் டிச. 6-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவருக்குப் பிறகு சுனில் குமாா் புதிய தலைவராகப் பொறுப்பேற்பாா்.

ஓஎன்ஜிசியின் மெஹ்சானா சொத்து பிரிவின் செயல் இயக்குநராக சுனில் குமாா் தற்போது பணியாற்றி வருகிறாா். ஓஎன்ஜிசி நிறுவன வரலாற்றிலேயே நிா்வாக இயக்குநா் குழுவுக்குக் கீழே பணியாற்றும் செயல் இயக்குநா் நிலையிலிருந்து ஒருவா் நேரடியாகத் தலைவா் பதவிக்கு உயா்வது இதுவே முதல்முறையாகும்.

மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் தோ்வு வாரியத் தலைவா் மல்லிகா சீனிவாசன் தலைமையிலான குழு நடத்திய நோ்காணல் மூலம், 19 விண்ணப்பதாரா்களில் இருந்து சுனில் குமாா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு இம்முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சுனில் குமாா்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.