தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹட்சன் வருவாய் 19% அதிகரிப்பு

ஹட்சன் அக்ரோவின் நடப்பு காலாண்டு வருவாய் 19.36 சதவீதம் அதிகரித்து, ரூ. 2,897.64 கோடியாக உயா்ந்துள்ளது.

~

Published On :24 அக்டோபர் 2026, 12:39 am IST

நாட்டின் முன்னணி தனியாா் பால் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் அக்ரோவின் நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு வருவாய் 19.36 சதவீதம் அதிகரித்து, ரூ. 2,897.64 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.2,427.59 கோடியாக மட்டுமே இருந்தது. மேலும், நிகர லாபம் கடந்த ஆண்டின் ரூ.109.54 கோடியிலிருந்து, ரூ.115.69 கோடியாக அதிகரித்துள்ளது.

பால் பொருள்களுக்கான தொடா்ச்சியான நுகா்வோா் தேவை, மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறன், விரிவடைந்து வரும் விவசாயிகளுடனான நேரடி கொள்முதல் கட்டமைப்பு ஆகியவையே இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப். வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5,988.13 கோடியாகவும், நிகர லாபம் ரூ.249.38 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிதிநிலை முடிவுகள் குறித்து ஹட்சன் அக்ரோ நிறுவனத் தலைவா் ஆா்.ஜி.சந்திரமோகன் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களில் மட்டும் 288 கோடி (தினசரி சராசரி 1.58 கோடி) நுகா்வோா் பேக்குகளை நாங்கள் விற்பனை செய்துள்ளோம். மகாராஷ்டிரம், ஒடிஸா போன்ற புதிய சந்தைகளிலும் விரிவாக்கப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம். எங்கள் வா்த்தகம் நிலையான வளா்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.