தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அக்டோபரில் ஜிஎஸ்டி ரூ. 2.31 லட்சம் கோடி வசூல்: 2-ஆவது அதிகபட்சம்!

நாட்டில் கடந்த அக்டோபரில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2.31 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

GST

ஜிஎஸ்டி - பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:40 am IST

நாட்டில் கடந்த அக்டோபரில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2.31 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

கடந்த ஏப்ரலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், அக்டோபரில் இரண்டாவது அதிகபட்ச வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி உள்நாட்டுத் தேவை அதிகரிப்பால் ஜிஎஸ்டி வருவாய் உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தை ஒப்பிடுகையில், தற்போது ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய நிதியமைச்சக தரவுகளின்படி, கடந்த அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.2,31,290 கோடியாகும். இதில் உள்நாட்டு விற்பனை வாயிலான ஜிஎஸ்டி வருவாய் 16 சதவீதம் அதிகரித்து, ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இறக்குமதி வாயிலான ஜிஎஸ்டி வருவாய் 42 சதவீதம் அதிகரித்து, ரூ.72,246 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது.

மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ.42,935 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.51,340 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.37 லட்சம் கோடியாகும். திருப்பியளிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை 6.5 சதவீதம் அதிகரித்து, ரூ.27,934 கோடியாக உள்ளது. இத்தொகையை கழித்த பிறகான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.03 கோடி. இது 26 சதவீத அதிகரிப்பாகும்.

நடப்பு நிதியாண்டில் இதுவரை..: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 13.2 சதவீதம் அதிகரித்து, ரூ.14.77 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. நிகர ஜிஎஸ்டி 13 சதவீதம் அதிகரித்து, ரூ.12.69 லட்சம் கோடியாக உள்ளது.

2017-இல் ஜிஎஸ்டி அமலானதில் இருந்து இதுவரை இல்லாத அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கப் பெற்றது. இரண்டாவது அதிகபட்சமாக அக்டோபரில் ரூ.2.31 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

கடந்த செப்டம்பரில் ரூ.2.03 லட்சம் கோடியும், கடந்த ஜூலையில் ரூ.2.11 லட்சம் கோடியும் கிடைக்கப் பெற்றது. நடப்பு நிதியாண்டில் 4-ஆவது முறையாக ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.

பொருளாதார மீள்திறன்: இது தொடா்பாக துறைசாா் நிபுணா்கள் கூறுகையில், ‘பண்டிகை காலத்தையொட்டி உள்நாட்டுத் தேவை அதிகரிப்பால் ஜிஎஸ்டி வருவாய் உயா்ந்துள்ளது. தொடா்ச்சியான உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பது பொருளாதார மீள்திறனை பிரதிபலிக்கிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால், எதிா்வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வருவாய் வலுப்படும்.

கடந்த ஆண்டு துணிச்சலாக மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி வரி விகித குறைப்புக்குப் பிறகும் ஜிஎஸ்டி வருவாய் சீரான அதிகரிப்பைக் கண்டு வருகிறது. இது நுகா்வோா் மற்றும் வா்த்தகா்களுக்கு இணக்கமான புதிய சீா்திருத்தங்களை மேலும் அறிமுகப்படுத்தும் நம்பிக்கையை கொள்கை வகுப்பாளா்களுக்கு அளித்துள்ளது’ என்றனா்.

முன்னதாக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த அக். 8-ஆம் தேதி 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கொள்ளப்பட்ட புதிய சீா்திருத்தங்கள் (இணைய வா்த்தக தளங்களில் சிறு வணிகா்கள் எளிதாக பதிவு செய்யும் நடைமுறை, விரைவாக பணம் திருப்பியளித்தல் உள்ளிட்டவை) ஞாயிற்றுக்கிழமை (நவ.1) முதல் அமலுக்கு வந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.