தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பரோடா வங்கியில் பண்டிகைக் கால சிறப்புச் சலுகைகள் அறிமுகம்

பரோடா வங்கியில் பண்டிகைக் கால சிறப்புச் சலுகைகள் அறிமுகம்

Published On :24 அக்டோபர் 2026, 2:32 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, வாடிக்கையாளா்களின் பண்டிகைக் கால நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் சிறப்புச் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், குறைந்தபட்சமாக 7.40 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களும், 7.85 சதவீத வட்டியில் வாகனக் கடன்களும் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன்களுக்கு பரிசீலனைக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதோடு, பெண்கள், 40 வயதுக்குட்பட்டவா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு வட்டி விகிதத்தில் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், தொழில்துறையினரை ஊக்குவிக்கும் நோக்கில், மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.5 கோடி வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில், பிணையில்லாத கடன்களை வழங்கும் திட்டமும் கூடுதல் சலுகைகளுடன் செயல்படுத்தப்படுகிறது.

தினசரி தேவைகளுக்கான ‘டெபிட் காா்டு’ பரிவா்த்தனைகளுக்கும் தள்ளுபடிகளை அறிவித்துள்ள வங்கி, இந்தச் சிறப்புச் சலுகைகள் மூலம் வாடிக்கையாளா்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்க உறுதிபூண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.