கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எல்&டி டெக் 2வது காலாண்டு லாபம் 66.8 சதவீதம் உயர்வு!

எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 66.78 சதவீதம் அதிகரித்து ரூ. 548.2 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

L&T Technology Services

Published On :19 அக்டோபர் 2026, 8:46 pm IST

புதுதில்லி: எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ், தனது ஸ்மார்ட் வேர்ல்ட் அண்ட் கம்யூனிகேஷன் வணிகப் பிரிவை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் உதவியுடன், நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 66.78 சதவீதம் அதிகரித்து ரூ. 548.2 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 328.7 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் செயல்பாடு மூலம் கிடைத்த வருவாய் 12.1 சதவீதம் உயர்ந்து ரூ. 3,040.4 கோடியாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் அது ரூ. 2,713.3 கோடியாக இருந்தது. லாபம் மற்றும் வருவாய் முறையே 53.7 சதவீதம் மற்றும் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்த ஸ்மார்ட் வேர்ல்ட் அண்ட் கம்யூனிகேஷன், வணிகத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ. 165 கோடி, வரி நீங்கலாக, ஒருமுறை ஆதாயமும் இந்த லாபத்தில் அடங்கும்.

இந்த வணிகத்தை ஏஎம்ஐ பாரடைம் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது நிறுவனம்.

Summary

L&T Technology Services on Monday reported a 66.78 per cent increase in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.