பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.73! 63 காசுகள் உயர்வு!

இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 63 காசுகள் உயர்ந்து நிறவடைந்தன.

News image

இந்திய ரூபாய்

Updated On :22 மே 2026, 5:48 pm IST

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடும் மற்றும் கச்சா எண்ணெய் விலை மென்மையடைந்ததால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 2வது வர்த்தக அமர்வாக உயர்ந்து ரூ. 95.73 என்ற நிலையில் நிலைபெற்றது.

ஈரான் சூழல் தொடர்பான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமான திசையில் நகர்வதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ சூசகமாகத் தெரிவித்ததையடுத்து, சந்தைகள் சற்று நிம்மதி அடைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மேலும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளின் நேர்மறையான போக்கு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் விகிதங்களில் ஏற்பட்ட சரிவு ஆகியவையும் ரூபாயின் உயர்வுக்குத் துணை புரிந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 96.30 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு அதிகபட்சமாக ரூ 95.30 என்ற நிலையையும், குறைந்தபட்சமாக ரூ. 95.68 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு 95.73 என்ற நிலையில் வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 63 காசுகள் அதிகமாகும்.

Summary

The rupee rose for the second consecutive session on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.