மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலில் இருதரப்பும் தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு ஆகியவை அவற்றின் உச்ச நிலையிலிருந்து சரிந்த நிலையில், அதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ. 95.36 ஆக நிறைவடைந்தது.
மேற்கு ஆசியப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு, உள்நாட்டு பங்குச் சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் சரிவு உள்ளிட்டவையால் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.47 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பிறாகான வர்த்தகத்தில், அதிகபட்சமாக ரூ. 95.23 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 95.67 வரை சென்றது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 25 காசுகள் உயர்ந்து ரூ. 95.36 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 காசுகள் சரிந்து ரூ. 95.61 ஆக நிறைவடைந்தது.
Summary
The rupee appreciated 25 paise to close at 95.36 against the US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.67! 31 காசுகள் சரிவு!!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.29! 10 காசுகள் சரிவு!!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.78! 8 காசுகள் சரிவுடன் தொடரும் வர்த்தகம்!!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.25! 35 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


