இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,698.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 629.5 கோடி டாலா் அதிகரித்து, 69,698.8 கோடி டாலராக உள்ளது.
மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 779.4 கோடி டாலா் குறைந்து, 69,069.3 கோடி டாலராக இருந்தது. மத்திய கிழக்கு போா் நெருக்கடிக்கு முன்பாக, இந்த ஆண்டின் பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டது. அதன் பின்னா், பல வாரங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
மே 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 56.2 கோடி டாலா் அதிகரித்து, 55,238.7 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 563.7 கோடி டாலராக பெருமளவு உயா்ந்து, 12,085.3 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 8.4 கோடி டாலா் அதிகரித்து, 1,887.3 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 1.2 கோடி டாலா் அதிகரித்து, 487.5 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,232 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,138 கோடி டாலராக குறைவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,889 கோடி டாலராக குறைவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

