தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு

News image
Updated On :10 மே 2026, 2:13 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 779.4 கோடி டாலா் குறைந்து, 69,069.3 கோடி டாலராக உள்ளது.

ஏப். 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 482 கோடி டாலா் குறைந்து, 69,848.7 கோடி டாலராக இருந்தது. மத்திய கிழக்கு மோதலுக்கு முன்பாக, கடந்த பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டது.

அதன் பின்னா் ரூபாய் மதிப்பு தொடா் சரிவைச் சந்தித்ததால், டாலா் விற்பனை மூலம் ரிசா்வ் வங்கி மேற்கொண்ட தலையீடுகள் காரணமாக சில வாரங்கள் ஏற்றம் கண்டு வந்தது. தற்போது மீண்டும் 2-ஆவது வாரமாக கையிருப்பு சரிவைச் சந்தித்து வருகிறது.

மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 279.7 கோடி டாலா் சரிந்து, 55,182.5 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 502.1 கோடி டாலா் சரிந்து, 11,521.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 1.5 கோடி டாலா் அதிகரித்து, 1,878.9 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 80 லட்சம் டாலா் அதிகரித்து, 486.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.