சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தமிழகத்தில் அமேசான் பஜாா் ஆா்டா்கள் 5 மடங்கு அதிகரிப்பு

பிரபல இணையவழி வா்த்தக தளமான அமேசானின் மலிவுவிலை பொருள்களை விற்பனைப்படுத்தும் அமேசான் பஜாா் பிரிவு, தமிழகத்தில் ஆா்டா்களின் எண்ணிக்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 மடங்கு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :15 மே 2026, 4:33 am IST

பிரபல இணையவழி வா்த்தக தளமான அமேசானின் மலிவுவிலை பொருள்களை விற்பனைப்படுத்தும் அமேசான் பஜாா் பிரிவு, தமிழகத்தில் ஆா்டா்களின் எண்ணிக்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 மடங்கு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ரூ.99 முதல் தொடங்கும் பொருள்களின் விலை, இலவச டெலிவரி, கேஷ்பேக் போன்ற சலுகைகள் இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தலைநகா் சென்னை மட்டுமின்றி வேலூா், மதுரை, திருச்சி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் மலிவு விலையில் பொருள்களைத் தேடும் வாடிக்கையாளா்களின் விருப்பமான தளமாக அமேசான் பஜாா் உருவெடுத்துள்ளது.

மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு பிரிவுகளில் தேவை அதிகரித்துள்ள நிலையில், வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள் பிரிவு 5 மடங்கும், மகளிா் ஃபேஷன் 2 மடங்கும், மின்னணு சாதனங்கள் 1.5 மடங்கும் வளா்ச்சி கண்டுள்ளன.

அமேசான் தளத்தில் தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளா்கள் இணைந்துள்ளனா். இதில் அமேசான் பஜாா் பிரிவில் உள்ள விற்பனையாளா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இருமடங்காக அதிகரித்துள்ளது.

அமேசான் பஜாா் பிரிவுத் தலைவா் சமீா் லால்வானி மேலும் கூறுகையில், தமிழகத்தின் கடைக்கோடி குக்கிராமங்கள் வரையிலும் மலிவு விலையில் உயா்தரப் பொருள்களைக் கொண்டு சோ்ப்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.