தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் 4வது காலாண்டு லாபம் ரூ. 8,598 கோடியாக உயர்வு!

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், மார்ச் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 3 சதவீதம் உயர்ந்து ரூ. 8,598 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

News image

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

மும்பை: பொதுத்துறை வங்கி சாரா நிதி நிறுவனமான, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், மார்ச் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 3 சதவீதம் உயர்ந்து ரூ. 8,598 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று தெரிவித்தது.

குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாகக் கடன் வாங்கியவர்கள் முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தியது மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவற்றால் இந்த லாப உயர்வைச் சற்று கட்டுப்படுத்தியது.

ரிசர்வ் வங்கியின் வரைவு விதிமுறைகளின் அடிப்படையில், ஒரே குழுமத்திற்கு வழங்கப்படும் கடன் வரம்பு தற்போதைய 50 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது. இந்த விதிமுறைகள் குறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சோப்ரா கவலை தெரிவித்தார். முன்மொழியப்பட்ட இந்த வரம்பை விடச் சில குழுமங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் அளவு அதிகமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இக்காலாண்டில் நிறுவனத்தின் முக்கிய நிகர வட்டி வருமானம் 11 சதவீதம் குறைந்து ரூ. 10,833 கோடியாக உள்ளது. 2026 நிதியாண்டில் நிகர வட்டி வரம்பு 3.55 சதவீதமாகச் சுருங்கியதும், கடன் புத்தகத்தில் ஏற்பட்ட 7 சதவீத வளர்ச்சியும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

மும்பை பங்கு சந்தையில் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் பங்கு விலை 1.23 சதவீதம் உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 446.10 என்ற விலையில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Summary

State-run non bank lender Power Finance Corporation on Wednesday reported a 3 per cent increase in its March quarter consolidated net profit at Rs 8,598 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.