மும்பை: அமெரிக்கா-ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டதன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு 35 காசுகள் சரிந்து ரூ. 95.63 என்ற வரலாறு காணாத சரிவில் நிறைவடைந்தன.
அமெரிக்க ஆதரவு பெற்ற சமாதானத் திட்டத்திற்கு, தெஹ்ரான் அளித்த சமீபத்திய பதிலை அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்ததைத் தொடர்ந்து, 10 வாரங்களாக நீடித்து வந்த இந்த மோதல் உலகளாவிய விநியோகத்தை மேலும் இறுக்கமாக கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு உயர்ந்த நிலையில் இருந்தால், இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறை மோசமடையக்கூடும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி வார இறுதியில் தெரிவித்த கருத்துகளுக்கு ஒரு நுட்பமான ஒப்புதலாகவே சந்தை வர்த்தகர்கள் கருதி உள்ளனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.57 என்ற அளவில் தொடங்கி, மேலும் சரிந்து, டாலருக்கு நிகரான ரூ. 95.74 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவை எட்டியது. பிறகு அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 35 காசுகள் சரிந்து, இறுதியில் ரூ. 95.63 என்ற புதிய சாதனை குறைந்தபட்ச அளவில் நிலைபெற்றது.
நேற்றை வர்த்தகத்தில் (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 காசுகள் சரிந்து ரூ. 95.28 என்ற புதிய சாதனை குறைந்தபட்ச அளவில் இருந்தது.
Summary
The rupee depreciated 35 paise to close at an all-time low of 95.63 against the US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: 1 டாலர் - ரூ. 95.31! 82 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.47! 25 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


