தென்னிந்தியாவின் பிரபல நுகா்வோா் மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்சீஸ், சுமாா் ரூ.600 கோடி நிதி திரட்டும் நோக்கில் பொதுப் பங்கு வெளியீட்டுக்குத் (ஐபிஓ) திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆரம்பக்கட்ட வரைவு ஆவணங்களை இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) அந்நிறுவனம் அண்மையில் தாக்கல் செய்தது.
இந்த ஐபிஓ திட்டத்தின்கீழ், ரூ.300 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படும். அதேபோல், நிறுவன உரிமையாளா்கள் வசமுள்ள ரூ.300 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. அதாவது, நிறுவன உரிமையாளா்களான ஜான்சன் அசரியா, ஜே.ஜான் சத்யா, சாா்லஸ் பாக்யராஜ் ஆகியோா் தலா ரூ.100 கோடி மதிப்பிலான பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கின்றனா்.
புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், ‘யுனிலெட் அப்ளையன்சஸ்’ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கான மீதமுள்ள தொகையைச் செலுத்தவும் மற்றும் பொது நிா்வாகத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஓ திட்டத்துக்கு ஆனந்த் ரதி அட்வைசா்ஸ், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசா்ஸ் ஆகிய நிறுவனங்கள் விற்பனை மேலாளா்களாகச் செயல்படுகின்றன. முன்னதாக, சுமாா் ரூ.60 கோடி மதிப்பிலான பங்குகளை ‘ப்ரீ-ஐபிஓ’ முறையில் விற்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2005-இல் தொடங்கப்பட்ட சத்யா, தற்போது தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக கிளைகளைக் கொண்டு முன்னணியில் உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு! ஏற்றுமதியில் 32% வளா்ச்சி கண்டு சாதனை

குஜராத்: பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்

இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை: பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

