இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஜனவரி மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்த நிலையில், உற்பத்தித் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தற்போது வளா்ச்சி கண்டுள்ளது. உற்பத்தித் துறையின் வளா்ச்சி ஜனவரியின் 5.3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயா்ந்துள்ளது, ஒட்டுமொத்த தொழில் துறை வளா்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.
சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளில் ஏற்பட்ட பின்னடைவை உற்பத்தித் துறையின் வளா்ச்சி ஈடுகட்டியுள்ளது. மின்சார உற்பத்தி வளா்ச்சி 5.1 சதவீதத்திலிருந்து 2.3 சதவீதமாகவும், சுரங்கத் துறை வளா்ச்சி 4.3 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.
பயன்பாட்டு அடிப்படையில், மூலதனப் பொருள்கள் உற்பத்தி கடந்த ஜனவரியில் 4.1 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 12.5 சதவீதமாக அபார வளா்ச்சி கண்டுள்ளது. இடைநிலை பொருள்களின் உற்பத்தியும் 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நுகா்வோா் பொருள்கள் பிரிவில், நீடித்து உழைக்கும் பொருள்களின் உற்பத்தி 7.3 சதவீதமாகச் சற்று உயா்ந்துள்ளது. அதேநேரம், உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான நுகா்வோா் பொருள்கள் உற்பத்தி -0.6 சதவீதமாகப் பின்னடைவிலேயே தொடா்கிறது. எனினும், இது முந்தைய மாதத்தின் -2.3 சதவீத சரிவைவிட மேம்பட்ட நிலையாகும். உள்கட்டமைப்பு சாா்ந்த பொருள்களின் வளா்ச்சி 14.6 சதவீதத்திலிருந்து 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மத்திய கிழக்கு போா் பதற்றங்களுக்கு முந்தைய தரவுகள் இவை என்பதால், மாா்ச் மாதத் தரவுகளில் பாதிப்பு இருக்கக்கூடும் என ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
குறிப்பாக, நாட்டில் ஏற்பட்டுள்ள வணிக எல்பிஜி சிலிண்டா் தட்டுப்பாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) கடுமையாகப் பாதித்துள்ளதாக இந்தியத் தொழில்முனைவோா் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால், வரும் மாதங்களில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக வங்கிக் கடன் வளா்ச்சி 15.9%

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

மாா்ச் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 4.1%

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

