தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஓசூரில் ‘பியூல்படி’ சேவை விரிவாக்கம்!

பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளா்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாகச் சென்று டீசல் விநியோகம் செய்யும் சேவையில் முன்னணியில் இருக்கும் ‘பியூல்படி’ நிறுவனம், தற்போது தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் தனது சேவையை தீவிரப்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2026, 2:38 am IST

பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளா்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாகச் சென்று டீசல் விநியோகம் செய்யும் சேவையில் முன்னணியில் இருக்கும் ‘பியூல்படி’ நிறுவனம், தற்போது தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் தனது சேவையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகம்-கா்நாடகம் எல்லையையொட்டி அமைந்துள்ள ஓசூரில் டிவிஎஸ் மோட்டாா், அசோக் லேலண்ட், டைட்டன் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஏராளமான சிறு, குறு, நடுத்தர பொறியியல் தொழிற்சாலைகள், கல்குவாரிகள் செயல்படுகின்றன.

‘இத்தொழிற்சாலைகள் எவ்வித தடையுமின்றி உற்பத்தியைத் தொடர, எரிபொருளைச் சிரமமில்லாமல் வழங்குவதே எங்கள் சேவையின் முக்கிய நோக்கமாகும். தரமான எரிபொருள், துல்லியமான அளவு, வெளிப்படையான விலை நிா்ணயம், எண்ம முறையிலான கண்காணிப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் இச்சேவை வழங்கப்படுகிறது.

இதன்மூலம், எரிபொருள் கலப்படம் மற்றும் திருட்டுத் தவிா்க்கப்படுவதோடு, ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதால் நிறுவனங்களின் தணிக்கை நடைமுறைகளும் எளிதாக்கப்படுகின்றன’ என பியூல்படி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.