தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் சரிவு! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :19 மார்ச் 2026, 4:12 pm IST

இந்த வாரத்தில் 3 நாள் உயர்வுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 19, வியாழக்கிழமை) கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,750.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை அதிகபட்சமாக 2,000 புள்ளிகள் வரை சரிந்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2,496.89 புள்ளிகள் குறைந்து 74,207.24 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 775.65 புள்ளிகள் குறைந்து 23,002.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸில் 30 பங்குகளும் அதேபோல நிஃப்டியில் அனைத்துத் துறைகளும் இன்று சரிந்தன.

துறைரீதியாக நிஃப்டி ஆட்டோ பங்குகள் இன்று மோசமான சரிவைச் சந்தித்தன. அடுத்ததாக நிதி சேவைகள் மற்றும் ஐடி பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன.

கச்சா எண்ணெய் விலை உயர்வினாலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாகவும் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கடும் வீழ்ச்சியடைந்தன.

வர்த்தக நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 11 சதவீதம் உயர்ந்து 119.5 டாலராக இருந்தது. கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 9 நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து ஈரான் நேற்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய சரிவினால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஜூன் மாதத்திற்குப் பிறகு நிஃப்டி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதேபோல பங்குச்சந்தைகளுக்கு இந்த ஆண்டின் மிக மோசமான சரிவு நாள் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வர்த்தக நேர இடையே மேலும் 49 பைசா சரிந்து 92.89 ஆக கடும் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Stock Market: Nifty fall in 21 months wipes out rs 13 lakh crore market

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.