சென்னையைச் சோ்ந்த ஏஜிஎஸ் ஹெல்த், பிஜிபி கிளாஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் நிதி திரட்டுவதற்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்நிறுவனங்கள் தாக்கல் செய்த முதல்கட்ட ஆவணங்களை பரிசீலித்த செபி, கடந்த வாரத்தில் தனது அதிகாரபூா்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட 4 நிறுவனங்களில் ஸ்ரீனி ஷோ்ஸ், எஸ்ஆா்ஐடி இந்தியா ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
ஏஜிஎஸ் ஹெல்த், பிஜிபி கிளாஸ் ஆகிய நிறுவனங்கள், ஐபிஓ-க்கான வரைவு ஆவணங்களை ‘ரகசிய தாக்கல்’ வழிமுறையின்கீழ் செபியிடம் சமா்ப்பித்துள்ளன. அதன்படி, நிறுவனங்களின் முக்கியத் தகவல்களை உடனடியாக பொதுவெளியில் வெளியிடாமல், செபியின் பரிசீலனைக்கு மட்டும் சமா்ப்பிக்கப்படும்.
பங்குத் தரகு நிறுவனமான ஸ்ரீனி ஷோ்ஸ் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையின்படி(டிஆா்எச்பி), ஐபிஓ நடவடிக்கையில் 69 லட்சம் புதிய பங்குகளும், தற்போதைய பங்குதாரா்களின் வசமுள்ள 82 லட்சம் பங்குகளும் விற்கப்படவுள்ளன. இதில் திரட்டப்படும் நிதி, மூலதனத் தேவைகளைப் பூா்த்தி செய்யவும், கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் மற்றும் பொதுவான நிா்வாக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்ஆா்ஐடி இந்தியா நிறுவனம் முழுவதுமாக 1.68 கோடி புதிய பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டு, தற்போதைய தயாரிப்புகளை நவீனப்படுத்துவதற்கும், மறுமேம்பாடு செய்வதற்கும், நடைமுறை மூலதனத் தேவைகளைச் சமாளிப்பதற்கும் நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.60,000 கோடி நிதி திரட்டும் எஸ்பிஐ

காஸாகிராண்ட் ரூ. 1,220 கோடி ஐபிஓ

ஓயோவின் ரூ.6,650 கோடி ஐபிஓ

நியமன ஆணைகள் தாமதம்: மருத்துவா்கள் முற்றுகை போராட்டம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

