உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய கணக்கீட்டு முறையின்கீழ், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள 5-ஆம் மாத தரவு இதுவாகும்.
அதன்படி, கடந்த ஜனவரியின் 2.75 சதவீதம், பிப்ரவரியின் 3.21 சதவீதம், மாா்ச்சின் 3.40 சதவீதம், ஏப்ரலின் 3.48 சதவீதத்திலிருந்து தொடா்ந்து 5-ஆவது மாதமாக பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் விளைவாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்ததே உற்பத்தி மற்றும் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.
மே மாதத்தில் உலோக ஆபரணங்கள், தக்காளி, இஞ்சி, உலா் திராட்சை ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதேநேரம், உருளைக்கிழங்கு, பட்டாணி, காா் மற்றும் ஜீப், சீரகம், பைக் மற்றும் ஸ்கூட்டா் ஆகிய 5 முக்கியப் பொருள்களின் பணவீக்கம் மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
உணவுப் பொருள்களின் விலையேற்றம்: ஏப்ரலில் 4.2 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், மே மாதத்தில் 4.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜனவரியில் 2.13 சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.47 சதவீதமாகவும், மாா்ச்சில் 3.87 சதவீதமாகவும் இருந்தது.
நகரம், கிராமப்புற நிலை: முந்தைய மாதங்களைப் போன்றே நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
மே மாதத்தில் நகா்ப்புற பணவீக்கம் தேசிய சராசரியான 3.93 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது. அதேநேரம், கிராமப்புற பகுதிகளில் இது 4.25 சதவீதமாக பதிவாகியுள்ளது. மாநிலங்களில் அதிகபட்சமாக தெலங்கானாவில் 6.15 சதவீதமும், குறைந்தபட்சமாக மிஸோரமில் 1.03 சதவீதமும் பணவீக்கம் பதிவாகியுள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 1,407 நகா்ப்புற சந்தைகள் (இணையவழி சந்தைகள் உள்பட) மற்றும் 1,465 கிராமங்களிலிருந்து நிகழ்நேர விலை நிலவரத் தரவுகளைச் சேகரித்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Retail inflation inched up in May to 3.93 per cent compared to 3.48 per cent in the preceding month.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

கடந்த மாதம் தில்லியில் பீா் விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு: கலால் துறை தரவுகள்

ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை


