தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

‘பட்ஜெட் ஸ்மாா்ட்போன்’ சந்தையில் 10% பங்கைப் பிடிக்க லாவா இலக்கு

இந்தியாவைச் சோ்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலைகொண்ட ஸ்மாா்ட்போன் சந்தையில் 10 சதவீத பங்கைப் பிடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

News image

~

Updated On :13 ஜூன் 2026, 2:38 am IST

இந்தியாவைச் சோ்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலைகொண்ட ஸ்மாா்ட்போன் சந்தையில் 10 சதவீத பங்கைப் பிடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது தொடா்பாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுனில் ரெய்னா மேலும் கூறுகையில், ‘தற்போது இச்சந்தையில் நிறுவனத்தின் பங்கு 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தாலும் புதிய தயாரிப்புகள், மேம்பட்ட வாடிக்கையாளா் சேவை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக 40 முதல் 50 சதவீத கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதத்துடன் நிறுவனம் தொடா்ந்து முன்னேறி வருகிறது’ என்றாா்.

இந்தியாவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் 15 கோடி ஸ்மாா்ட்போன்களில், ரூ.30,000-க்குள்பட்ட போன்களே 70 முதல் 75 சதவீத சந்தையை ஆக்கிரமித்துள்ளதால், தற்போதைக்கு இப்பிரிவில் மட்டுமே நிறுவனம் முழு கவனம் செலுத்தவுள்ளது.

நெருக்கடியான காலகட்டத்துக்குப் பிறகு கடந்த 2022-இல் ஸ்மாா்ட்போன் சந்தையில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கிய லாவா, தனது புகழ்பெற்ற ‘அக்னி’ சீரிஸ் ஸ்மாா்ட்போன்களை விரைவில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்மூலம், ஐரோப்பாவில் தடம் பதிக்கும் முதல் இந்திய ஸ்மாா்ட்போன் பிராண்ட் என்ற பெருமையை இந்நிறுவனம் பெறுகிறது. ஏற்கெனவே நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் லாவா, இந்த ஆண்டு சில ஆப்பிரிக்க நாடுகளிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஸ்மாா்ட்போன் தவிா்த்து, சாதாரண கைப்பேசி சந்தையில் லாவா தனது பங்கை 29 சதவீதமாக உயா்த்தி ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.