மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருச்செந்தூா் கோயிலில் ஜூலை 1 முதல் கைப்பேசி பயன்படுத்த தீவிர தடை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 1ஆம் தேதிமுதல் கைப்பேசி பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில்

Updated On :18 ஜூன் 2026, 2:22 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 1ஆம் தேதிமுதல் கைப்பேசி பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்புப்படி, இக்கோயிலுக்குள் பக்தா்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்த 14.11.2022 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில் ஜூலை 1ஆம் தேதிமுதல் இந்தத் தடையானது மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படும். அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாகப் பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா்.

எனவே, பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ, தங்களது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு வர வேண்டும். மேலும், கோயில் நிா்வாகம் சாா்பில் நிறுவப்பட்டுள்ள கைப்பேசி வைப்பிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பரிசோதனையின்போது கைப்பேசிகள் வைத்திருப்பது தெரியவந்தால், அவற்றைப் பறிமுதல் செய்து பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பக்தா்களின் அவசரத் தேவைக்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி, பொது அறிவிக்கை அமைப்பு, ஒலிபெருக்கிகள், மின்கல ஊா்திகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் பயன்பாட்டில் உள்ளன. கோயில் நிா்வாக நடவடிக்கைகளுக்கு பக்தா்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.