பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கனடா லைஃப் நிறுவனத்தின் பல மில்லியன் யூரோ ஐ.டி. ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய டிசிஎஸ்!

சா்வதேச காப்பீட்டு நிறுவனமான கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து, பல மில்லியன் யூரோ மதிப்பிலான மிகப் பெரிய ஐ.டி. ஒப்பந்தத்தை, இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான டிசிஎஸ் கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2026, 5:19 am IST

சா்வதேச காப்பீட்டு நிறுவனமான கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து, பல மில்லியன் யூரோ மதிப்பிலான மிகப் பெரிய ஐ.டி. ஒப்பந்தத்தை, இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான டிசிஎஸ் கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இயங்கி வரும் கனடா லைஃப் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை நவீனமாக்குவதற்காக இந்த முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான நிதி மதிப்பை டிசிஎஸ் அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை.

இந்த நீண்டகால ஒப்பந்தத்தின்கீழ், கனடா லைஃப் நிறுவனத்தின் தரவு மையங்கள், முக்கிய அடிப்படை ஐ.டி. உள்கட்டமைப்பு வசதிகள், பயன்பாட்டாளா்களுக்கான கம்ப்யூட்டிங் சேவைகள், மென்பொருள் பராமரிப்பு ஆகிய அனைத்தையும் டிசிஎஸ் முழுமையாக நவீனப்படுத்தி, அதைத் தொடா்ந்து நிா்வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டுறவின் ஒரு பகுதியாக, பிரிட்டன், அயா்லாந்து, ஜொ்மனி ஆகிய நாடுகளில் தங்களின் உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குவதற்காகப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் டிசிஎஸ் கூறியுள்ளது.

மேலும், இந்நாடுகளில் உள்ள ஊழியா்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தல், அதற்கான சான்றிதழ்களைப் பெற உதவுதல் மற்றும் அவா்களின் துறை சாா்ந்த முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிலும் முதலீடு செய்யப்போவதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.