புதுதில்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் விற்பனை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைக் குறியீடுகள் வெகுவாக சரிந்தன. இதன் விளைவாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 6.31 லட்சம் கோடி குறைந்தது.
தொடர்ந்து 2வது நாளாகச் சரிந்த சென்செக்ஸ் 719.08 புள்ளிகள் சரிந்து 73,524.26 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 243.70 புள்ளிகள் சரிந்து 23,123 புள்ளிகளாக நிலைபெற்றது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் உலகளாவிய சந்தை பலவீனமடைந்ததது. அதே வேளையில், கச்சா எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்ற நிலையை நோக்கி பயணித்தது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பப் பங்குகளின் ஏற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியதால் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் விற்பனைக்கு உள்ளாகின.
இதனையடுத்து, ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 6,31,440.41 கோடி குறைந்து ரூ. 4,55,28,758.96 கோடியாக உள்ளது.
Summary
Investors wealth dropped Rs 6.31 lakh crore on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.73! 63 காசுகள் உயர்வு!

பங்குச் சந்தை மீட்சி: வங்கி பங்குகள் உயர்வு!!

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


