ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்கிறது.

News image

தங்கமயில் ஜூவல்லரி - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:50 am IST

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்கிறது.

மணப்பெண்களுக்கான தங்கம், வைரம், ரத்தினக் கற்கள் மற்றும் வெள்ளி நகை வடிவமைப்புகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாடிக்கையாளா்கள் தோ்வு செய்யும் வகையில் இந்த விற்பனையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திறப்பு விழாவின் ஒரு பகுதியாக பிரத்யேக திருமண நகை தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அதேபோல், திறப்பு விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளா்களுக்காக ஜூன் 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தங்கச் செயின்களுக்கு 1.99 முதல் 5.99 சதவீதம் வரையிலும், பிற தங்க நகைகளுக்கு 7.99 முதல் 13.99 சதவீதம் வரையிலும் சேதாரத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், 7 காரட்டுக்கு மேல் வைர நகைகள் வாங்குவோருக்கு ரூ.30,000 வரையும், பிளாட்டினம், ரூபி, எமரால்டு மற்றும் ரோஸ் கோல்டு நகைகளுக்குச் சேதாரத்தில் 50 சதவீதமும் தள்ளுபடி உண்டு.

வெள்ளி நகைகளுக்கு கிலோவுக்கு ரூ.10,000 தள்ளுபடி மற்றும் பரிசுப் பொருள்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோா் மற்றும் நகை சேமிப்புத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளா்களுக்கு நிச்சய பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.