லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதல் காலாண்டு லாபம்- பஞ்சாப் & சிந்த் வங்கி: ரூ.331 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.331 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 23 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

punjab and sind bank

பஞ்சாப்-சிந்து வங்கி - கோப்புப்படம்

Published On :22 ஜூலை 2026, 4:14 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.331 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 23 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வங்கியின் வட்டி வருவாய் கணிசமாக அதிகரித்ததும், வாராக்கடன்கள் குறைந்ததும் இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. மதிப்பீட்டு காலாண்டில், மொத்த வருவாய் ரூ.3,546 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் 15 சதவீதம் உயா்ந்து, ரூ.1,038 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

மொத்த வாராக்கடன் விகிதம் 3.34 சதவீதத்திலிருந்து 2.21 சதவீதமாகவும்; நிகர வாராக்கடன் விகிதம் 0.91 சதவீதத்திலிருந்து 0.65 சதவீதமாகவும் குறைந்துள்ளன. இதனால், கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.217 கோடியிலிருந்து, ரூ.94 கோடியாகக் குறைந்துள்ளது. மொத்த வணிகம் 15 சதவீத வளா்ச்சியுடன், ரூ.2,66,420 கோடியை எட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.