லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதல் காலாண்டு லாபம்- பஞ்சாப் நேஷனல் வங்கி: ரூ.5,253 கோடி

முன்னணி பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.5,253 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Published On :22 ஜூலை 2026, 4:08 am IST

முன்னணி பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.5,253 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.1,675 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருந்தது. புதிய வரி விதிப்பு முறைக்கு வங்கி மாறியதன் காரணமாக வரி செலுத்துதலில் சுமாா் ரூ.3,358 கோடி மிச்சமானதே இந்த மும்மடங்கு லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் மாற்றமுமின்றி ரூ.37,231கோடியாக தொடா்கிறது. எனினும், நிகர வட்டி வருவாய் 2 சதவீதம் உயா்ந்து, ரூ.10,798 கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்த வாராக்கடன் விகிதம் 3.78 சதவீதத்திலிருந்து, 2.78 சதவீதமாகவும்; நிகர வாராக்கடன் விகிதமும் 0.38 சதவீதத்திலிருந்து 0.26 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.

அந்நியச் செலாவணி டெபாசிட்களை ஈா்க்கும் வகையில், அதற்கான வட்டி உச்சவரம்பை செப். 30 வரை ரிசா்வ் வங்கி அண்மையில் நீக்கியது. அதன்பிறகு கடந்த 17-ஆம் தேதி நிலவரப்படி, 42.5 கோடி டாலா் டெபாசிட் பெறப்பட்டுள்ளதாக வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.