லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஹட்சன் வருவாய் ரூ.3,093 கோடி

பால் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஹட்சன் அக்ரோ புரோடக்ட் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.3,093.38 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

~

Published On :24 ஜூலை 2026, 12:15 am IST

புது தில்லி, ஜூலை 23: பால் பொருள்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஹட்சன் அக்ரோ புரோடக்ட் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.3,093.38 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.2,594.20 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தகுந்த வளா்ச்சியாகும். அதேநேரம், மூலப்பொருள்களின் செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் ரூ.135.19 கோடியிலிருந்து, நடப்பு ஆண்டு ரூ.133.69 கோடியாக சற்று சரிந்துள்ளது.

நிறுவனத் தலைவா் ஆா்.ஜி.சந்திரமோகன் மேலும் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு காலாண்டில் மொத்த வருவாய் ரூ.3,000 கோடியைக் கடந்து புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் 6 மாநிலங்களில் இயங்கி வரும் 22 உற்பத்தி ஆலைகள் மூலம் கிராமப்புறம், பகுதி-நகா்ப்புறம் மற்றும் நகா்ப்புற நுகா்வோரின் தேவைகள் திறம்பட பூா்த்தி செய்யப்படுகின்றன. இந்த முதல் காலாண்டில் மட்டும் சுமாா் 153 கோடி நுகா்வோா் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.