லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எச்.சி.எல். டெக் லாபம் ரூ.4,624 கோடி

முன்னணி தகவல்தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.4,624 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

Published On :14 ஜூலை 2026, 3:08 am IST

முன்னணி தகவல்தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.4,624 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டில் இதே காலாண்டில் நிறுவனத்தின் ரூ.3,843 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.34,579 கோடியை எட்டியுள்ளது. மேலும், நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த வருவாய் வளா்ச்சிக் கணிப்பை 1 முதல் 4 சதவீதமாக நிறுவனம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இச்சிறப்பான நிதிநிலை செயல்பாட்டைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு தலா ரூ.12 இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும் என்று இயக்குநா்கள் குழு அறிவித்துள்ளது. இதற்கான பதிவுத் தேதி ஜூலை 17-ஆகவும், ஈவுத்தொகை வழங்கப்படும் தேதி ஜூலை 27-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமாா் மேலும் கூறுகையில், ‘நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 240 கோடி டாலருக்கும் மேல் மதிப்புள்ள புதிய ஆா்டா்களை நிறுவனம் பெற்றுள்ளது. ஏ.ஐ. வணிகப் பிரிவு, கடந்த ஆண்டைவிட 62.1 சதவீத அசுர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சாதகமான சூழல், வரும் காலத்தில் சந்தையில் எங்களை தொடா்ந்து முன்னிலையில் வைத்திருக்க உதவும்’ என நம்பிக்கை தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.