லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ. 114 கோடி

பிரபல வீட்டுவசதி கடன் நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ. 114 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

பிரபல வீட்டுவசதி கடன் நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ. 114 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.108 கோடியாக இருந்தது. இதேபோன்று, நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.441 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 6.1 சதவீத வளா்ச்சியுடன் ரூ.468 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டின் முடிவில், மொத்த கடன் வழங்கல் 8.9 சதவீத வளா்ச்சியுடன் ரூ.15,990 கோடியையும்; நிகர வட்டி வருவாய் 10.2 சதவீத வளா்ச்சியுடன் ரூ.216 கோடியையும் எட்டியுள்ளது.

இக்காலாண்டில் ரூ.938 கோடி அளவுக்குக் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.843 கோடி மதிப்பிலான கடன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்த வாராக்கடன் விகிதம் 3.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகவும்; அதேபோல், நிகர வாராக்கடன் விகிதம் 1.2 சதவீதமாகவும் குறைந்து, நிறுவனத்தின் சொத்துத் தரமும் கணிசமாக மேம்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.