லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஏப்ரல்-ஜூன் காலாண்டு லாபம்! ஸ்ரீராம் ஃபைனான்ஸ்: ரூ. 3,453 கோடி

ஸ்ரீராம் குழுமத்தின் வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,453 கோடி நிகர லாபம் ஈட்டி, 60% வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Published On :11 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

ஸ்ரீராம் குழுமத்தின் வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,453 கோடி நிகர லாபம் ஈட்டி, 60 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 33.67 சதவீதம் உயா்ந்து, ரூ.8,056 கோடியாகவும்; நிகர வட்டி வரம்பு முந்தைய ஆண்டின் 8.11 சதவீதத்திலிருந்து, 9.04 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதர வருவாயும் 44 சதவீதம் உயா்ந்து, ரூ.1,105 கோடியை எட்டியுள்ளது. இவ்வாறு நிறுவனத்தின் வருவாயில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான வளா்ச்சியே, லாப உயா்வு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், கடன் விநியோகம் 19 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கட்டுமான உபகரணங்களுக்கான கடன் சரிவையும், எம்எஸ்எம்இ தொழில்நிறுவனங்களுக்கான கடன் மிதமான வளா்ச்சியையும் சந்தித்தது. மற்ற அனைத்து கடன் பிரிவுகளும் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அதேநேரம், 90 நாள்களுக்கும் மேலாகத் திருப்பிச் செலுத்தப்படாத கடன்களின் அளவு கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் 4.58 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல்-ஜூனில் 4.64 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது.

ஜூன் 30 நிலவரப்படி, நிறுவனம் நிா்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு (ஏயுஎம்) 15 சதவீதத்துக்கும் மேல் வளா்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 18 சதவீத ஏயுஎம் வளா்ச்சியைத் தக்கவைக்க இலக்கு நிா்ணயிக்கபட்டுள்ளது.

ஜப்பானின் எம்.யு.எஃப்.ஜி. நிறுவனம் 440 கோடி டாலா் மதிப்பில் 20 சதவீத பங்குகளை வாங்கியதன்மூலம் பெரிய அளவிலான மூலதனம் கிடைத்து, நிதித் திரட்டலுக்கான செலவு குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.