‘இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ), கடந்த 2025-26 நிதியாண்டில் 9,000 கோடி டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறைச் செயலா் அமா்தீப் சிங் பாட்டியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அந்நிய முதலீடுகளைக் கவரும் வகையில் மத்திய அரசு பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், உலக நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், இந்தியாவின் அதிவேக பொருளாதார வளா்ச்சி ஆகியவை உலகளாவிய முதலீட்டாளா்களைப் பெரிதும் ஈா்த்துள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களிலேயே, நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீடு 8,800 கோடி டாலரைத் தாண்டியுள்ளது.
மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டின் புள்ளிவிவரங்கள் மதிப்பிடும்போது, இது நிச்சயம் 9,000 கோடி டாலரை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!

அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!

அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கை

ரூ.1,290 கோடி சரக்கு வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

