ஆப்பிள் ஐபோன் 18 மாடல் போன்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்று ஐபோன் விரும்பிகளுக்கும், எலைட் லிஸ்ட் போன் பிரியர்களுக்கும் மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தலைமுறையினர் ஒரு போனில் அடுத்த வெர்சன் வந்துவிட்டால், இருக்கும் போனை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு புதிய போன் வாங்குவதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்.
எலைட் லிஸ்ட்டில் அனைவரும் விரும்பு போன்களில் முதன்மையான போனான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 மற்றும் 17 புரோ விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
ஐபோன் 17 மோகமே இன்னும் அடங்காத நிலையில், அதற்குள் அடுத்த தலைமுறை ஐபோன் 18 பற்றிய தகவல்கள் நாள்தோறும் இணையத்தில் கசிந்து கொண்டே இருக்கின்றன.
நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு, ஐபோன் 18 மாடலில் என்னென்ன அம்சங்கள், ஃபீச்சர்களை எதிர்ப்பார்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
வழக்கமான போன்களைப் போன்றே 6.3 அங்குல ஒ.எல்.இ.டி. தொடுத்திரை, 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஸ் ரேட்டுடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு கூடுதலாக, தற்போது உள்ள டைனமிக் ஐலண்ட் அளவு குறைக்கப்படலாம் அல்லது முற்றிலும் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த தலைமுறை ஏ20 சிப் செட் இந்த மாடலில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த போனில் மின்சார சேமிப்பு மற்றும் வெப்பக்கட்டுப்பாடு ஆகியவை மேம்படுத்தப்படவுள்ளன.
சாதாரண மாடலிலும் 12 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. ஸ்டோரேஜ் விருப்பங்கள் 256 ஜி.பி. முதல் 1 டி.பி. வரை உள் நினைவகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கேமராவில், 48 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது. மெயின் மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸ்களுடன் வரும் இந்த கேமரா, முந்தைய மாடலைவிட மேம்பட்டத் தரத்தை வழங்கும் என்றும், முன்புற கேமராவும் மேம்படுத்தப்பட்டு, 24 மெகாபிக்சல் வரை உயர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 18 மாடலை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 1,49,900 ரூபாயாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Summary
Anticipation is building around Apple’s next flagship lineup, with early leaks offering a glimpse into what the iPhone 18 series might bring. Among the expected models, the iPhone 18 Pro Max is drawing particular attention for its larger size, improved battery life and upgraded camera system.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனையில் உல்லாசப் படகு சேவை: அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு

ஐபோன் 17 வாங்க சிறந்த இணைய விற்பனை தளம் எது? எவ்வளவு தள்ளுபடி?

ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்கலாம்! எப்படி?

ஐபோன் 16 வாங்க ஃபிளிப்கார்ட் வழங்கும் சிறந்த தள்ளுபடி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
