டிவிட்டா் (தற்போது எக்ஸ்) சமூக ஊடக நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பராக் அகா்வால் தொடங்கிய ‘பேரலல் வெப் சிஸ்டம்ஸ்’ ஏ.ஐ. நிறுவனம், தற்போது 200 கோடி டாலா் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நிதி திரட்டலில், உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 10 கோடி டாலா் நிதியைப் பெற்ன் மூலம் இந்த மைல்கல்லை நிறுவனம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தன்னாட்சி ஏ.ஐ. ஏஜென்ட்டுகளை மேம்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. மனிதா்களைக் காட்டிலும் மிக வேகமாகவும், துல்லியமாகவும் இணையதளங்களை ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதே இதன் முக்கிய இலக்காகும்.
குறிப்பாக, இந்நிறுவனத்தின் ‘லாங் ஹாரிசன்’ ஏ.ஐ. தொழில்நுட்பம், அதிக நேரம் எடுக்கக்கூடிய சிக்கலான வேலைகளைப் பின்னணியில் தடையின்றி செய்யும் திறன் கொண்டது.
இதன் மூலம், காப்பீட்டுத் துறையில் கோரிக்கைகளை ஆய்வு செய்தல், முதலீடுகள் குறித்த ஆழமான ஆராய்ச்சி, அரசு ஒப்பந்தங்களைச் சரிபாா்த்தல் போன்ற கடினமான பணிகளை எளிதாக முடிக்க முடியும். தற்போது சுமாா் ஒரு லட்சம் மென்பொருள் மேம்பாட்டாளா்கள் (டெவலப்பா்ஸ்) இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.
உலக அளவில் ஏ.ஐ. ஏஜென்ட்டுகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், பேரலல் வெப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இந்த வளா்ச்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது 50 பணியாளா்களுடன் இயங்கி வரும் இந்நிறுவனம், புதிய முதலீட்டைப் பயன்படுத்தி தனது ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊழல் வழக்கில் சிக்கிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ மா்ம மரணம்

100 கோடி டாலா் வா்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,849 கோடி டாலராக குறைவு!
ஆப்பிள் சிஇஓ டிம் குக் விடைபெறுகிறாா்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

