விவோ நிறுவனம் தன்னுடைய எக்ஸ்300 எஃப்இ செல்போனை X300 அல்ட்ரா மாடலுடன் சேர்த்தே மே 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது என்பதை அறிவித்துவிட்டது.
இந்தியாவில் விவோ X300 எஃப்இ பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துவிட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ விலை நிலவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, அது பற்றிய புதிய விலை நிலவரங்கள் கசிந்துள்ளன.
விவோ இணையதளத்தில் விவோ X300 எஃப்இ புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மிக அழகிய வெளிர் பச்சை நிறத்தில் இந்த செல்போன் இடம்பெற்றுள்ளது. அதன் பாக்ஸ் இடம்பெறும் புகைப்படத்தில் விலை ரூ.1,19,999 என்று அச்சிடப்பட்டுள்ளது.
ஆனால், இதன் சில்லறை விற்பனை விலை கிட்டத்தட்ட 80 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த செல்போனானது 12 ஜிபி + 256 ஜிபி வரை கிடைக்கிறது. 6500 mAh மற்றும் 90 வாட்ஸ் உடன் 40 வாட்ஸ் ஒயர்லெஸ் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த செல்போனின் முன்பக்க கேமராவும் 50எம்பி கொண்டிருக்கும்.
பொதுவாக செல்போன் பெட்டியில் எம்ஆர்பி சற்று கூடுதலாகவே இருக்கும் . விற்பனை விலை குறைவாக இருக்கலாம்.
கூடுதலாக, இந்த செல்போன் நொய்ர் பிளாக், இந்தியன்-எக்ஸ்ளூசிவ் அர்பன் ஆலிவ், லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
செல்போனுடன் சார்ஜர், யுஎஸ்பி கேபிள், கேஸ், சிம் எஜ்க்ட் டூல், வாரண்டி கார்டு, வழிகாட்டிப் புத்தகம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
When will the Vivo X300 FE be launched and what is its price?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


