வாரத்தின் முதல் நாளான நேற்று (ஏப். 6) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கிய நிலையில் ஏற்றத்துடன் முடிந்தது.
தொடர்ந்து இன்று(ஏப். 7) பங்குச்சந்தைகள் சற்றே சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,734.36 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 161.26 புள்ளிகள் குறைந்து 73,945.59 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.85 புள்ளிகள் குறைந்து 22,921.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.72 சதவீதம், 0.14 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ அதிகபட்சமாக 2% வரை சரிந்தன. அதேபோல நிஃப்டி வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
நிஃப்டி ஐடி, உலோகம், மீடியா பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்வுடனும் பெரும்பாலான பங்குகள் சரிந்து வர்த்தகமாகின்றன.
இஸ்ரேல் - ஈரான் போர், நாளை ரிசர்வ் வங்கியின் கூட்டம் ஆகியவற்றால் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகிறது.
Summary
Stock Market: Sensex down 160 pts, Nifty near 22,900
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள், நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு!

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

