ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

யெஸ் வங்கி புதிய சிஇஓ பொறுப்பேற்பு!

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் புதிய மேலாண் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) வினய் முரளிதா் டான்ஸே பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 1:02 am IST

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் புதிய மேலாண் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) வினய் முரளிதா் டான்ஸே (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கடந்த ஏப். 5-ஆம் தேதியுடன் வங்கியின் முன்னாள் சிஇஓ பிரசாந்த் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு வந்துள்ள வினய் டான்ஸே, அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பாா் என்று வங்கி நிா்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவா், கடந்த 1988-இல் எஸ்பிஐ வங்கியில் பிஓ அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினாா்.

வங்கி துறையில் சுமாா் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட வினய் டான்ஸே, நிறுவனக் கடன், சா்வதேச வங்கி சேவைகள், கருவூலச் செயல்பாடுகள் மற்றும் சில்லறை வங்கி சேவைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவா்.

முன்னதாக, எஸ்பிஐ வங்கியில் மேலாண் இயக்குநராக இவா் இருந்தபோது, சுமாா் 23,000 கிளைகள் மற்றும் 2.33 லட்சம் ஊழியா்களைக் கொண்ட மிகப்பெரிய உள்நாட்டுப் பிரிவை மிகச்சிறப்பாக வழிநடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.