ஜெய்ப்பூர்: அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவையால், ஆயில் இந்தியா நிறுவனம், ராஜஸ்தானின் தார் பாலைவனத்திலிருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் ஆயில் இந்தியா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜோத்பூரிலிருந்து நாள் ஒன்றுக்கு 1,202 பீப்பாய்கள் என்ற சாதனை அளவிலான உற்பத்தி தற்போது எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா, கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 705 பீப்பாய்களாக இருந்த உற்பத்தியை, தற்போதைய நிதியாண்டில் சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
ஜெய்சால்மரில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், டேங்கர்கள் மூலம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கிருந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் கோயலி சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் வழியாக அனுப்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2025-26 நிதியாண்டில், ஆயில் இந்தியாவின் ராஜஸ்தான் எண்ணெய் வயலில் செய்த அசாத்தியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களால், கடந்த ஆண்டு 32,787 மெட்ரிக் டன்களிலிருந்து அதிகரித்து 43,773 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பதிவு செய்தது.
ஆயில் இந்தியா நிறுவனம் 2017 முதல் பகேவாலா எண்ணெய் வயலிலிருந்து கணிசமான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருகிறது.
Summary
Amid heightened geopolitical tensions and uncertainty in global oil markets, Oil India Ltd has significantly ramped up crude production from Rajasthan's Thar desert
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

கச்சா எண்ணெய் இறக்குமதி: நாட்டின் பொருளாதார பலவீனம்! எச்டிஎஃப்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


