ஷாவ்மி நிறுவனம் புதிதாக மினி ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய சந்தையில் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவியை, 55, 65, 75, 85 மற்றும் 98 அங்குலம் என 5 வகையான திரை அளவுகளுடன் ஷாவ்மி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. புதிதாக குளிர்பதனப் பெட்டி, குளிரூட்டி போன்றவற்றையும் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த வகையில் புதிதாக எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தைக்கு ஷாவ்மி அறிமுகம் செய்யவுள்ளது. எக்ஸ் தளப் பதிவு மூலம் ஷாவ்மி இதனை உறுதி செய்துள்ளது.
ஷாவ்மி கிளைகளில் மட்டுமல்லாது, பலதரப்பட்ட தளங்களில் சில்லறை விற்பனையை அதிகரிப்பதற்கான பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஷாவ்மி எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்
எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி 5 வகையான திரை அளவுகளுடன் தயாரிக்கப்படுகின்றன. 55, 65, 75, 85 மற்றும் 98 அங்குல திரைகளில் கிடைக்கும்.
இந்த வகை திரைகள் அனைத்தும் 4கே (3,840 x 2,160 பிக்சல்ஸ்) விடியோ தரத்தில் இயங்குபவை.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1,200 nits திறன் உடையது.
15W ஸ்பீக்கர், டால்பி ஒலி அம்சம் உடையது.
கூகுள் ஓஎஸ் உள்ளதால் அனைத்து வகையான ஒளிபரப்பு தளங்களையும் தரவிறக்கம் செய்து காண இயலும்.
வைஃபை 5, புளுடூத் 5.0 உடையன.
இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட்கள் உள்ளன.
அடுத்தடுத்த நாள்களில் இதன் விலை குறித்து ஷாவ்மி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Xiaomi TV S Mini LED series India launch set for April 15: What to expect
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டிலேயே தியேட்டர் அனுபவம்! ரியல்மியில் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

15 விநாடிகளில் கூலிங்! ஷாவ்மியில் அறிமுகமானது சப்தமில்லாத ஏசி!

இனி செல்போனிலேயே இசையமைக்கலாம்! புதிய ஏஐ கருவியை அறிமுகம் செய்த கூகுள்!

ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை தொடக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

