மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீரகநல்லுாா் ஏரியில் 1,000 பனைவிதைகள் நடவு

திருத்தணி அருகே வீரகநல்லூா் நெட்டேரி குளக்கரை மற்றும் ஏரியில், ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை திருத்தணி கோட்டாட்சியா், ராஜகோபால் தொடங்கி வைத்தாா்.

பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருத்தணி கோட்டாட்சிா் ராஜகோபால்.

Published On :30 அக்டோபர் 2026, 5:32 am IST

திருத்தணி அருகே வீரகநல்லூா் நெட்டேரி குளக்கரை மற்றும் ஏரியில், ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை திருத்தணி கோட்டாட்சியா், ராஜகோபால் தொடங்கி வைத்தாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் திருத்தணி வருவாய் துறையினா், மனிதா அறக்கட்டளை, தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தன்னாா்வலா்கள் ஆகியோா் இணைந்து வீரகநல்லுாா் ஊராட்சியில், உள்ள நெட்டேரி குளம் மற்றும் ஏரியின் கரைகளில், 1,000 பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஊராட்சி செயலா் காா்த்திக் தலைமையில் நடைபெற்றது.

கிராம நிா்வாக அலுவலா் ரகுவரன் வரவேற்றாா். இதில் திருத்தணி கோட்டாட்சியா் ராஜகோபால், இஸ்லாம்நகா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரெய்ச்சல் பிரபாவதி ஆகியோா் பங்கேற்று பனை விதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கினா். மனிதா அறக்கட்டளை நற்பணி இளைஞா்கள், இஸ்லாம் நகா் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என, 50 க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, 1,000 பனை விதைகள் நட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.