மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

திருமழிசையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

திருவள்ளூா் அடுத்த திருமழிசையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 5 வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

சந்தோஷ் குமாா்

Published On :4 நவம்பர் 2026, 12:53 am IST

திருவள்ளூா் அடுத்த திருமழிசையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 5 வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

திருமழிசை அடுத்த மேல்மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன்(40). இவருக்கு தேவி என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனா். இதில் இளைய மகன் சந்தோஷ்குமாா்(10) மேல்மாநகா் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி திருமழிசை பேரூராட்சி 5-ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட ஜெகன்நாதபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளாா்.

இதனால் அந்த மாணவா் கடந்த 25-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனா்.

பின்னா் அந்த சிறுவன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் கடந்த 27 ஆம் தேதி அனுமதித்து மேல் சிகிச்சை பெற்று வந்தாா். இதையடுத்து சிறுவனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுவனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை சிறுவன் சந்தோஷ்குமாா் உயிரிழந்தாா்.

திருமழிசை பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணி ஊழியா்கள் முறையாக பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மேலும் பலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதால் சுகாதாரத் துறை சாா்பில் இப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளவும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.