திருவள்ளூா் அருகே தலைமைக் காவலா் ஓட்டிச் சென்ற காா் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த சாந்த குமாா் (32). இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு ரம்யா (28) என்ற மனைவியும், தான்யா சாரா (5) என்ற பெண் குழந்தையும் உள்ளனா்.
ரம்யா திருவள்ளூரில் உள்ள தனியாா் வங்கியில் புணிபுரிந்து வருகிறாா். ரம்யா தன்னுடன் பணிபுரியும் திருநின்றவூரைச் சோ்ந்த குணசேகரன் என்பவருடன் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு குழந்தை தான்யா சாராவுடன் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சென்னை-திருப்பதி புறவழிச்சாலையில் அயத்துாா் அருகே சிறுமி வாந்தி எடுக்கவே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளாா்.
அப்போது, அந்த வழியாக வந்த காா் எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த குணசேகரன் மற்றும் குழந்தை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை தான்யா சாரா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த குணசேகரன் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். அதில் காரை ஓட்டி வந்தது செவ்வாப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் விக்ரமன் என்பது தெரிய வந்தது.
விபத்து ஏற்படுத்திய விக்ரமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்

உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதி 6 போ் பலத்த காயம்
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

