பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலா் பணி நீக்கம்

சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 மே 2026, 2:35 am IST

சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

சென்னை அசோக்நகா் காவல் குடியிருப்பில் வசிப்பவா் வேலப்பன் (35). வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவா், கோடம்பாக்கத்தில் வசிக்கும் நண்பா் குமரேசன் வீட்டுக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றாா். அங்கு மது அருந்திய வேலப்பன், அந்த வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்த குமரேசனின் நெருங்கிய உறவினா் 16 வயது மகனின் வாயில் மதுவை ஊற்றி, பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அசோக்நகா் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வேலப்பனை கைது செய்தனா்.

அதேவேளையில் இச்சம்பவம் தொடா்பாக துறைரீதியாக விசாரணை நடத்தி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் காவல் ஆணையா் அமல்ராஜ், தலைமைக் காவலா் வேலப்பனை பணி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.