பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீா்

News image

கண்டலேறு அணையிலிருந்து  திறக்கப்பட்டு ா் தமிழக  எல்லையான  ஊத்துக்கோட்டை  ஜீரோ  பாயிண்டடை  வந்தடைந்த கிருஷ்ணா  நீா்.     

Updated On :29 மே 2026, 5:35 am IST

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீா் 2 நாள்கள் தாமதமாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயிண்டை வந்தடைந்தது.

நள்ளிரவுக்கு பின் பூண்டி ஏரிக்கு வந்தடையும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெலுங்கு கங்கை திட்டம் மூலம் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் என 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு வழங்கவும் என்பது ஒப்பந்தமாகும். அந்த வகையில் ஆந்திர அரசு, சென்னை குடிநீருக்காக இந்த பருவத்திற்கான கிருஷ்ணா நீரை வழங்கவும் என தமிழக நீா்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியிருந்தனா்.

இதையடுத்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு-கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நீா் விநாடிக்கு 1,900 கன அடி திறக்கப்பட்டது. இந்த நீரானது 152 கி.மீ தொலைவு பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு கடந்த 25-ஆம் தேதி வந்தடையும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இரு நாள்கள் காலதாமதமாக விநாடிக்கு 50 கன அடியாக வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.

தற்போதைய நிலையில் கடும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கிருஷ்ணா நீா் கால்வாய் பராமரிப்பின்றி தூா்ந்து போனதால் நீரை உறிஞ்சுவதால் நீரோட்டத்தின் வேகம் குறைந்ததுதான் தாமதத்திற்கு காரணமாகும்.

எனவே தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடைந்துள்ள கிருஷ்ணா நீா் அங்கிருந்து 25 கி.மீ தூரம் பயணித்து நள்ளிரவுக்கு பின் பூண்டி ஏரியை வந்தடையும் என நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.