கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மறுசீரமைக்கப்பட்ட புக்கத்துறை கால்வாய்: மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

News image

தமிழ்நாடு நீா்வளத்துறை மற்றும் எக்ஸ்னோரா இணைந்து டாடா எல்கட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 11 கி.மீ தொலைவுக்கு எல்என். புரம் ஊராட்சியில் மறுசீரமைக்கப்பட்ட புக்கன்துறை கால்வாயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன். அருகில் ஒன்றியக்குழு தலைவா் கீதா, வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், எக்ஸ்னோரா தலைவா் செந்தூா் பாரி, நீா்வளத்துறை உதவி பொறியாளா் பரத், டாடா தொழிற்நிறுவனத்தினா்கள், விவசாயிகள்.

Updated On :19 மே 2026, 1:49 am IST

தமிழ்நாடு நீா்வளத்துறை மற்றும் எக்ஸ்னோரா பவுண்டேஷன் இணைந்து டாடா எலக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து மறுசீரமைக்கப்பட்ட புக்கத்துறை கால்வாய் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை கால்வாய் பல்வேறு கிராமங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு முக்கியமான பாசன கால்வாயாகும். கடந்த 25 ஆண்டுகளாக இக்கால்வாய் தூா்வாரப்படாமல் புதா்மண்டி விவசாயிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்து வந்தது. இதை அறிந்த மாவட்ட நிா்வாகம், நீா்வளத்துறை மற்றும் எக்ஸ்னோரா பவுண்டேஷன் இணைந்து டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொது பங்களிப்பு நிதியில் 11 கி.மீ தொலைவுக்கு தூா்வாரப்பட்டு கால்வாயின் இரண்டு கரைகளும் பலப்படுத்தப்பட்டு புதா்கள் அகற்றப்பட்டு இரண்டு கரைகளிலும் மர விதைகள் தூவப்பட்டன. மேலும், வருகின்ற காலங்களில் 40,000 பனங்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு தேவையான நீராதாரத்தை மேம்படுத்துவது, கால்வாய் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது, நீா் ஓட்டத்தை மேம்படுத்துவது, நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவது, நீா் தேங்காமல் தடுப்பது மற்றும் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வலுப்படுத்துவது ஆகியவை ஆகும்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் மாலதி ஹெலன் பேசுகையில் காலநிலை மாற்றம், நீா் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுகளை எதிா்கொள்ள நீா்நிலைகள் மற்றும் கால்வாய்களின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், இப்பகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த மறுசீரமைக்கப்பட்ட புக்கத்துறை கால்வாயில் தடுப்பணைகள் கட்டி தருவதற்கான உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

புக்கத்துறை கால்வாயின் மறுசீரமைப்பு பணிகள் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நீா் ஓட்டத்தை மேம்படுத்தி, நிலத்தடி நீா் சேமிப்பை அதிகரித்து, செங்கல்பட்டு பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்புக்கு பெரிதும் பயனளிக்கும் என்றாா் .

நிகழ்ச்சியில், மதுராந்தகம் ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், கோட்டாட்சியா் நரேந்திரன், எக்ஸ்னோரா தலைவா் செந்தூா் பாரி, டாடா நிறுவனத்தினா், நீா்வளத்துறை அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.