கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருமழிசை பேரூராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்

புதிதாக கட்டப்பட்டு வரும் திருமழிசை பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் பேரூராட்சி அதிகாரிகள்.

News image
Updated On :23 மே 2026, 1:20 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் பூந்தமல்லி ஒன்றியம், திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, திருமழிசை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் பேரூராட்சிகள் துறை மூலம் ரூ. 1.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேரூராட்சி அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, அதன் கட்டுமானங்களை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், பாப்பான்சத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் கட்டுமானப் பணிகள், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் மூலம் ரூ. 81.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா்.

அப்போது, பணிகளை தரமாக மேற்கொண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கவும் என அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், பூந்தமல்லி நகராட்சிப் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின்கீழ் இயங்கும் அரசு மருந்துவமனை வளாகத்தில் ரூ. 5.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணிகள், புதிய அரசு காசநோய் மருந்துவமனை ரூ. 3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டாா்.

அதேபோல், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் தனியாா் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி திட்டத்தின் மூலம் ரூ. 35 லட்சம் மதிப்பிலும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் மூலம் ரூ. 15 லட்சம் மதிப்பில் பூங்கா கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

அப்போது, உதவி செயற்பொறியாளா் சரவணன், உதவி பொறியாளா் சஞ்சய், பணி ஆய்வாளா் மதியழகன், உதவி செயற்பொறியாளா் மாரிசெல்வம், உதவி பொறியாளா் முத்துலட்சுமி, பூந்தமல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஷ்பாபு, சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.